Kamal’s letters
Though Discussion Forums can be tedious, ForumHub throws up quite a few gems at times. There was an interesting discussion on letters featured in Kamal’s movies. Here are two (in Tamil). Though there may be some inaccuracies, they are worth reading. The other two movies discussed were Anbe Sivam and Guna; hope to get those too sometime and publish them.
Kurudhippunal:
நான் எனது போலீஸ் அங்கியை கலைத்து வைத்து விட்டு, உணர்வுகளை கலையாமல் எழுதும் கடிதம் இது.
அரசியலும் வன்முறையும் ஒப்பந்தம் செய்து கொண்டு, அக்னி சாட்சியாக ஜோடி சேர்ந்து விட்டன.அந்த ஜோடியின் சந்ததிகள் நாடெங்கிலும் ஊழல் தீ வளர்த்து, அதில் நேர்மையை ஊற்றி யாகம் செய்கின்றனர்.விரைவில் நேர்மையை வழிபடுவோர், தீண்டத்தகாதவராய், பின்தங்கிப்போவர் என்ற பயம் பலரைப் போல எனக்கும் உண்டு.
நீதி கேட்கும் ஆராய்ச்சி மணிகள், நாக்கறுந்து போய் அழகுப்பொருள்களாகி விட்டன.
ஆகையால், அரசாங்கத்தின் கவனம், நியாயத்தின் பக்கம் திரும்ப, துப்பாக்கிகள் வெடித்தன.
தீவிரவாதம் பேசி, துப்பாக்கிகள் ஏந்திய, சில நேர்மையான போராளிகளையும், ஊழல் தீப்பொறிகள் சுட்டு விட்டன.
அத்தகைய தீப்பொறிகளில் ஒருவன் தான் “பத்ரி” எங்கிற “பத்ரிநாதன்”.
அவனால் பெருக்கெடுத்த, ஒரு குருதிப்புனலில் நனைந்த அன்று முதல், என் வாழ்க்கை மொத்தமாய் மாறிப்போனது.
…………………………………………………….
தீவிரவாதிகள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள். அவர்களை உருவாக்குவதில் பெரும் பங்கு அரசியலுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ளது.
நாளைய தலைமுறை வழிபடப்போகும் கடவுளின் வடிவம், துப்பாக்கி வடிவில் இல்லாமல் பாதுகாக்க வேண்டியது, நமது கடமை.
நடந்து முடிந்தவை வெறும் அத்தியாயங்களே, கதை இன்னும் முடியவில்லை. அதை தயவு செய்து முடித்து வையுங்கள்.
அன்புடன்,
ஆதி.
The more famous one from Hey Ram:
ப்ரிய மைதிலி,
கல்யாணம் ஆயிரம் காலத்துப் பயிர் என்றொரு வசனமுண்டு. பயிர் என்றாலே என்றேனும் அறுவடையும் உண்டு.
மைதிலி நீ நல்லவள், அழகானவள். நீ எனக்கு வாய்த்தது நான் செய்த புண்ணியம் என்றும், நான் உனக்கு வாய்த்தது நீ என்றோ செய்த பாவம் என்றும் கொள்வோம்.
என் செயலின் காரணம் கூடிய விரைவில் உனக்குப் புரியும். பாரத மாதாவுக்கு நான் செய்யப் போகும் சேவைக்கு சொந்த
பந்தங்கள் இடையூறு ஆகலாம்.உனது கருவில் வளரும் குழந்தை மேல், எனது துர்குணங்களின் நிழல் விழாமல் உன் குணப்பிரகாஷம் காப்பாற்றட்டும்.
என் தாயை நான் பார்த்ததில்லை. வசந்தா அக்கா தான் எனக்குத் தாய், இப்போது நீயும்.
மாமா மாமி அனைவரின் சாபமும் எனக்கு உண்டென அறிவேன். அவற்றிலிருந்து மீளும் அருகதையும் எண்ணமும் எனக்கு இல்லை.
அன்பிலா,
சாகேத்ராம்

